உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை 13 ஊஞ்சல் பாட்டு. ஓரைவர் ஈரைம் பதின்மர்உடன் றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம் பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல் வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி ஆண்ட செருவில் கயற்புலியான் மன்பதை காக் கும்கோமான் மன்னன் திறம்பாடி மின்செய் இடை நுடங்க வாடாமோ ஊசல் விறல்விற் பொறிபாடி யாடாமோ ஊசல். பொன்னிப் பாட்டு. 51. 52. உழவர் ஓதை மதகோதை யுடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி. 53. மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ வாடை அது போர்த்துக் கருங்க யற்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. 54. பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்க ளிசைபாடக் காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மாலை அருகு அசைய நடந்ததெல்லா நின் கணவன் நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி 55 0