உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 செந்தமிழ் மாலை பற்றா அசரை மசரை தெளிறு பருவிராலும் அணையிலே பாயக்காலில் பாயக் குளத்தில் பாயவயலில் பாயவே சிற்றாறென்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மனப் பெருமை போல் சித்ரா நன்னதி பெருகிவார சித்ரம் பாரும் பள்ளிரே . 63 மருதப் பாட்டு. காயக் கண்டது சூரிய காந்தி கலங்கக் கண்டது வெண்டயிர்க் கண்டம் மாயக் கண்டது நாழிகை வாரம் மருகக் கண்டது வான்சுழி வெள்ளம் சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல் தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம் தேயக்கண்டது உரைத்திடும் சந்தம் சீவலா மங்கைத் தென்கரை நாடே. கறை பட்டுள்ளது வெண்கலைத் திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் சிறை பட்டுள்ளது விண்ணெழும் புள்ளு திரிப்பட்டுள்ளது நெய்படும் தீபம் குறைப்பட் டுள்ளது கம்மியர் அம்மி குழைப்பட்டுள்ளது வல்லியங் கொம்பு மறைப்பட் டுள்ளது அரும்பதச் செய்யுள் வளமை யாசூர் வடகரை நாடே. மீதுயர்ந் திடு தெங்கிள நீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயைச் சூதமொன்று சுமக்கக் கொடுக்கும் சூதின் தன்கனி தூங்கும் பலாவில் 64. 65.