உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை. 19 அளந்திடா மகிழ்ச்சி கொண்டான்-பண்ணை ஆண்டவற்குச் செய்தி விண்டான் நடுகைப் பாட்டு, படைகொண்டே வரு கரனையும் - பொரு விடையம் சேர்திரி சிரனையும் பண்டு முடித்த கணையினார்-குகன் கண்டு பிடித்த துணையினார் குடை குன்றாய்ப் பசுக்கு இடை நின்றார் - முக் கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக் கொண்டு நடச்செய்தே- இது கண்டோ மென்ன புதுமையே தொடை என்றால் வாழைத் தண்டைப்போல் - விழிக் கடை என்றால் கணை ரெண்டைப்போல் - தலைச் சொருக்கென்றால் மேகத் தடுக்குப்போல்-பல் நெருக்கென்றால் முல்லை அடுக்குப்போல் இடை என்றால் வஞ்சிக் கொடியைப் போல்- வரு நடை என்றால் இளம் பிடியைப் போல் இருந்த சாயலுக் கிப்பால் குருந்தி திருந்தினாளடி பள்ளிரே கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க் கொரு நஞ்சனார் கடையும் அமுதை உடையும் திரையில் காட்டி அண்டருக் கூட்டினார் அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக் கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்துக் குலைத்து நடச் செய்தே 77. 78.