உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 செந்தமிழ் மாலை. சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சித் தள்ளுநர் போல் வீரர்உடல் தரிக்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து விட்டுப் போகாத நரிக்குலத்தின் புகழ்ச்சி காண்மின். 99 சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து தடங் குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள் காந்தனுடன் கனல் அமளி அதன்மேல் வைகும் கற்புடைமா தரைஒத்தல் காண்மின், காண்மின். 100. தம் கணவருடன் தாமும் பேசா ரன்றே சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார். எங்கணவன் கிடந்தவிட மெங்கே என்றென்று இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின் 101. வாய்மடித்துக் கிடந்த தலை மகனைநோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ நீ மடித்துக் கிடந்த தெனப் புலவி கூர்ந்து நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின். 102. பொருதடக்கை வாளெங்கே மார்பம் எங்கே போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத பருவயிரத் தோள் எங்கே எங்கே என்று பயிர வியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின் 103.. வேறு காதலற் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்னது எவன்வாழி யோதோழீ. 104.