செந்தமிழ் மாலை. 25 நன்பகற் போதே நடுக்கு நோய் கைம்மிடும் அன்பனைக் காணாது அலறும் என் நெஞ்சன்றே அன்பனைக் காணாது அலறும் என் நெஞ்சாயின் மன்பதை சொன்னது எவன்வாழி யோதோழீ. 105. தஞ்சமோ தோழீ தலைவன் வரக் காணேன் வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சாயின் நெஞ்சிலார் சொன்னது எவன்வாழி யோதோழீ. 106. தமிழ்மொழிப் பாட்டு. யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் பாமர ராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமம் அது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் சென் வள்ளுவர் போல் இளங் கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை. ஊமை யராய்ச் செவிடர்களாய், குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் சேமமுற வேண்டு மெனில் தெரு வெல்லாம். தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர். 07. 108.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/29
தோற்றம்