26 செந்தமிழ் மாலை. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதில் ஒர் மகிமை யில்லை திறமான புலமை யெனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும். உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப் பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்க மரர் சிறப்புக் கண்டார். பாமாலை. 109. 110. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நார்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற பரமே என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே. 111
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/30
தோற்றம்