உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை. தமிழ்த் தெய்வம். நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே தெக்கணமும் அதிற் சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் [தமிழ் அணங்கே. 1. பொதியமலைப் பாட்டு திங்கள்முடி சூடு மலை : தென்றல்விளை யாடுமலை தங்கு முயல் சூழுமலை : தமிழ் முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு அருள் சுரந்து பொழிவதென பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே மந்தமா ருதம்வளரும் மலை எங்கள் மலையே வடகலை தென்கலை பயிலும் மலை எங்கள் மலையே கந்தவேள் விளையாடும் மலை எங்கள் மலையே 2. கனக நவ மணி விளையும் மலை எங்கள் மலையே இந்த மாநிலம் புரக்கும் அங்கயற் கண் அம்மை இன்ப முறும் தென் பொதிய மலை எங்கள் மலையே.3. சிங்கமும் வெங்களிறும் உடன் விளையாடும் ஒருபால் சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும் அங் கொருபால் வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால் விட அரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செந்தமிழ்_மாலை.pdf/5&oldid=1684204" இலிருந்து மீள்விக்கப்பட்டது