2 செந்தமிழ் மாலை. அங்கண் அமர் நிலம் கவிக்கும் வெண்கவிகை நிழற்கீழ் அம்பொன்முடி சூடும் எங்கள் அபிடேக வல்லி செங்கமலப் பதம் பரவும் கும்பமுனி பயிலும் தென் பொதியமலை காண் மற்றெங்கள் மலை அம்மே. 4. கொழுங்கொடியின் விழுந்த வள்ளிக் கிழங்கு கல்லி எடுப்போம் குறிஞ்சி மலர் எடுத்து முல்லைக் கொடியில் வைத்துத் [தொடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் செழும் தினையும் நறும் தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப்புலித்தோலின் பாயலிற் கண் படுப்போம் எழுந்து கயற்கணி காலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள் குறக் குடிக் கடுத்த இயல்பிது காண் அம்மே 5. புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை இணங்கும் புதுத்தினைகல் உரல் பாறை முன்றில்தொறும் உணங்கும் கல்விடரில் வரிவேங்கை கடமானோடு உறங்கும் கருமலையில் வெள் அருவி கறங்கிவழிந் திறங்கும் சில்வலையும் பல்வாரும் முன் இறப்பில் தூங்கும் சிறுதுடியும் பெருமுரசும் திசைதொறும் நின்றேங்கும் கொல்லையில் மான் பிணையும் இளம் பிடியும்விளை யாடும் குறிச்சி எங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே 6. பொற்றொடி வள்ளிக்கிளைய பூங்கொடி என் பாட்டி பூமகள் மா யவன் மார்பில் பொலிவள் என்று சொன்னாள் மற்றவள் பெண்களில் எங்கள் பெரியதாய் கலைமான் மலர் அயனார் திருநாவில் வாழ்வள் என்று சொன்னாள் பெற்ற எங்கள் நற்றாயும் சுந்தரி இந் திரன் தோள் பெறும் என்றாள் பின் எங்கள் சிறியதாய் அம்மே 0
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/6
தோற்றம்