செந்தமிழ் மாலை. சொற்ற குறிக் களவிலை என் கன்னிமார் அறியச் சொன்னேன் பொய் யல நாங்கள் சொன்னது [சொன்னதுவே. 3 7. முன்னொரு நாள் அம்மைதடா தகைபிறந்த நாளில் முகக் குறிகண் டிவள் உலக முழுதாளு மென்றேன் பின்னொருநாள் கைக்குறி பார்த் தம்மை யுனக்கெங்கள் பிஞ்ஞகர்தாம் மணவாளப் பிள்ளை யென்று சொன்னேன் அன்னை யவள் மெய்க்குறிகள் அனைத்தையும் பார்த் [துனக்கோர் ஆண்பிள்ளை உண்டுபிறந் தரசாளு மென்றேன் சொன்ன குறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும் தொகுத்து நீ நினைந்தகுறி இனிச் சொலக்கேளம்மே. 8. செந்தமிழ் நாடு. தக்க பூமிக்கு முன்புள்ள நாடு சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு சிவத்து ரோகமும் நீங்கிய நாடு முக்க ணான்விளை யாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு அமைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்' வசந்த ஆரிய நாடெங்கள் நாடே. மாத மூன்று மழையுள்ள நாடு வருட மூன்று விளைவுள்ள நாடு வேத மூன்றும் பலாவுள்ள நாடு விசேஷ மூன்றும் குலாவுள்ள நாடு போத மூன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம் செயும் நாடு
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/7
தோற்றம்