பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


 4. தமிழ் ஆராய்ச்சி பற்றிப் பல்கலைக்கழகங்கட்கு இடையே இணைப்பான முயற்சி ஏற்பட வழி வகைகள் செய்ய வேண்டும்.


5. உடனடியாக ஆராய்ச்சி செய்யப்பெற வேண்டிய பொருள்களைப் பகிர்ந்துகொண்டு பல்வேறு அறிஞர்களும் நிலையங்களும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும்.


6. மாவட்டத் தண்டலர் (Collector) துணைத் தண்டலர், தாசில் தார்கள் , கிராமமுனிசீபுகள் ஆகியோர் தங்கள் தங்கள் ஆட்சி எல்லையில் கிடைக்கும் சிற்பங்கள்----காசுகள்-----கல்வெட்டுக்கள் ---- சாசனங்கள்----- பழமொழிகள்----நாடோடிப் பாடல்கள் முதலியன பற்றிய தகவல்களை அவ்வப்போது தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவிற்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல் களைத் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகம் 'செய்திப் பதிவுச் சுவடி' (Register of Information) ஒன்றில் பதிவு செய்துகாெண்டு அவற்றைப்பற்றித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.