பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


 6. தமிழ் நாட்டு மடாலயங்களில் உள்ள ஏடுகள், அச்சிட்ட நூல்கள், சா ச ன ங்க ள் முதலியன.


7. இந்தியாவில் உள்ள பல்வேறு நூல் நிலையங்களிலும் தமிழ் (Tamiliana) பற்றிக் கிடைக்கும் ஏடுகள், அச்சிட்ட நூல்கள்.


8. அயல் நாட்டு நூல் நிலையங்களில் உள்ள தமிழ் பற்றிய ஏடுகள், அச் சிட்ட நுால்கள்.


(இவற்றைத் தொகுக்கச் சிறந்த தமிழ் அறிஞர் குழு ஒன்றை அமைத்து, எல்லா வசதிகளுடனும் உலகில் உள்ள பலநாட்டு நூல் நிலையங் களையும் சுற்றிப் பார்க்க வழி வகை செய்ய வேண்டும். பழமையாக உள்ள சுவடிகளைப் பிரதி செய்ய அல்லது ஒளிப்படம் (Micro Film) எடுக்க ஆவன புரிய வேண்டும்.)


9. சென்னை ஆவணக்களரியில் (Records Office) உள்ள பழைய ஆவணங்களைப் பற்றிய குறிப்பேடு (Guide to Records) தயாரிக்க வேண்டும்.


10. தமிழக மாவட்டம் ஒவ்வொன்றிலும் உள்ள பேரூர், சிற்றுரர்களின் பெயர்களை அகர வரிசைப்படுத்தித் தொகுக்க வேண்டும்.