பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளா்க்கும் சிந்தனைகள்

7




V. தாவரப் பூங்கா (Botanical Gardens)


பழந்தமிழ் இலக்கிய நால்களிலும் மருத்துவ நூல்களிலும் பயின்று வந்துள்ள மரங்கள் மலர்களுள் பலவற்றை இப்போது சரியாக அறிந்துகொள்ளக் கூடவில்லை. அத்தாவர வகைகளை விளக்கிக் காட்டும் வகையில் ஒரு பூங்கா நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.


VI. பழந்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் புதுப்பித்தல்

1. (1) தமிழியன் ஆண்டிக்கொரி (Tamilian Antiquary), (2) இந்தியன் ஆண்டிக்காொி (Indian Antiquary), (3) சித்தாந்த தீபிகை, (4) செந்தமிழ், (5) கலைமகள் முதலான பல்வேறு வெளியீடுகளிலும் தமிழ்த் தொடர்புடையனவாக முன்னர் வெளிவந்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை முறைப்படுத்தித் தொகுத்துத்தக்க விளக்கக் குறிப்புக்களுடன் வெளியிட வேண்டும்.


2. தமிழக வரலாற்றுத் தொடர்புடையனவாய் உள்ள பல நூல்கள் சென்னை நுால் நிலையங்களில் சிதைந்தழியும் நிலையில் உள்ளன. எடுத்துக்காட்டாக (1) History of the Madras