பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


 போக்கு நிகழ்ச்சிகளையும், சந்தை, மஞ்சிவிரட்டு முதலிய கிராமியக் காட்சிகளையும், பல்வேறு கோவில் விழாக்களையும் திரைப்படங்களாக்கி வெளியிட வேண்டும்.


11. ஏற்றப்பாட்டு, வில்லுப்பாட்டு முதலியனவும் பலவேறிடங்களிலும் பேசப்படும் விதவிதமான பேச்சுக்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பெற வேண்டும்.


12. தமிழ் நாட்டில் இசைத்தட்டு யுகம் தொடங்கியதும் பல இசை வல் லுனர்கள் இசைத்தட்டுக்களில் தங்கள் பாட்டைப் பதிவு செய்துகொள்ள அனுமதி அளித்தனர். அவ்விசைத் தட்டுக்கள் வாயிலாகப் பல பழைய பண்முறைகளே அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. எ ன வே, அவ்விசைத்தட்டுக்கள் அழிந்து பாேகாமல் காக்கப் பெற வேண்டும்.


13. திரைப்பட உதவியால் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படம் எடுத்திருப்பது போல, பழந்தமிழ் இலக்கியங்களை அக்காலச் சூழ்நிலை அமையப் படம் எடுக்க வேண்டும்.


14. தமிழ் மொழியில் உள்ள பல்வேறு சமயங்களைச் சார்ந்த பத்திப்பாடல்களையும் தக்கவர்களைக் கொண்டு பாடச்செய்து, இசைத் தட்டுக்களாக்கி, மக்கள் பயன்படுத்திக்கொள்ளச் செய்தல் வேண்டும்.