பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


 கருத்திற்கும் கதையமைப்பிற்கும் தரப்படும் சிறப்பினும் நூறு மடங்குச் சிறப்பு பாத்திர அமைப்புகட்கும் (Characterisation) வாழ்க்கைப் பண்புகட்கும் தரப்படல் வேண்டும்.


XV. தமிழைப்பற்றி இந்திய உலகமொழிகளில் வெளி வரும் குறிப்புக்களின் தொகுப்பு


1. தமிழ் மொழி, இலக்கியம், தமிழ் நாடு இவை பற்றிப் பண்டு தொட்டு இன்று வரை தமிழரல்லாத இந்திய--ஆசிய--உலக--நல்லறிஞா் கள் வெளியிட்டுள்ள குறிப்புக்கள் தக்க விளக்கங்களுடனும் அடிக்குறிப்புக்களுடனும் வெளியிடப் பெற வேண்டும்.


2. ஆண்டுதோறும் இந்திய மொழி இதழ்களிலும் உலக மொழி இதழ்களிலும் தமிழ் கொடர்புடையனவாய் வெளி வரும் கட்டுரை