பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

19




XVI. இலக்கியச் சொல் ஆராய்ச்சி

தமிழ் இலக்கியத்தைப் பல்வேறு காலக் கூறுகளாகப் பகுத்துக்கொண்டு ஒவ்வோர் இலக்கியத்திற்கும் சொல்லகராதியைத் தக்க விளக்கங்களுடன் தயாரிக்க வேண்டும்.

XVII. பொது மக்கள் நூல்கள்

பல்வேறு முக்கியப் பொருள்கள் பற்றியும் தமிழில் ஒரே வடிவான 'பொதுமக்கள் நூல்கள்' (Popular books) வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டும்.

XVIII. ஆட்சி மொழித் துறையில் தமிழ்

1. ஆட்சித் துறையில் தமிழ் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி ஒவ்வோர் ஆண்டும் 'தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ ஆராய்ந்து, அறிக்கை வெளியிட வேண்டும்.

2. அந்த அறிக்கை கடந்த ஆண்டில் அத்துறையில் காணப்பட்ட குறைகளைக் குறிப்பிடுவதோடு, வரும் ஆண்டில் அக்குறைகள் நீங் கிப் புதிய முன்னேற்றங்கள் ஏற்படவழி வகைகளையும் கூற வேண்டும்.