பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்



3. ஆட்சி மொழித் துறையில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பிறை வளைவுகளுள் (Brackets) அமைத்து, அவை நடை முறையில் பயனுறாத நிலையில் இருக்கும் கேட்டை அகற்ற வேண்டும்.

4. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவிற்கு மாநில ஆட்சி மொழி ஆணையாளர் ஒவ்வோர் ஆண்டும் தம் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் மேலும் முன்னேற்றம் அடைதற்குரிய வழி வகைகள் பற்றியும் அறிக்கை ஒன்றை ஒப்படைக்க வேண்டும். அந்த அறிக்கையை ஆய்ந்து தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழு, மாநில ஆட்சி மொழி ஆணையாளர் கருத்துக்களை நிறைவேற்ற ஆவன புரிய வேண்டும்.

XIX. ஆலயங்களில் தமிழ்க்கலை ஆராய்ச்சி

1. படிப்படியாக ஆலயங்களில் தமிழ் வழிபாடு நிகழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

2. கோயில்களைப் புதுப்பிக்கும் வேலைகள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும். பழமையான சிற்பச் செல்வங்கட்குச் சேதம் விளையாமல் இருக்க, ஏற்கெனவே செய்யப் பெற்றுள்ள ஏற்பாடுகள் நடைமுறையில் ஈடேறப் புதிய வழி வகைகள் காணப்பெற வேண்டும்.