பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

21


 3. அறநிலையப் பாதுகாப்புக் கழகம் தனி ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்திக் கோயில்களில் உள்ள பழைய ஆவணங்களைப் பரிசீலனைசெய்து அவற்றிலிருந்து வரலாற்றுக் குறிப்புக்களைச் சேகரித்து வெளியீடுகளாக வெளியிட வேண்டும்.

4. கோயில்களின் அமைப்பிலும், கோயிற் சிற்பங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தின் ஆராய்ச்சிப் பகுதி ஈடுபட வேண்டும்.

5. கோயிற் குளங்களில் அமிழ்ந்து கிடக்கும் சிலைகளை வெளிப்படுத்த வேண்டும்.

XX. தமிழ் நாட்டு வண்ணப்படத் தொகுப்பு

தமிழகம் பற்றிய (இயற்கை, கலையியல் பொருளியல் முதலிய) விளக்கங்களைத் தரும் ஒரு வண்ணப்படப் பட்டியல் (A Pictorial Atlas) தயாரிக்கப்பெற வேண்டும்.

XXI. தமிழ்ச் செல்வர்களது கடமை

தமிழ் நாட்டுச் செல்வர்கள் தமிழாராய்ச்சிக்கான அமைப்புக்களை ஏற்படுத்துவதிலும் நன்கொடைகள் வழங்குவதிலும் கருத்துச் செலுத்த வேண்டும்.