பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும் குறைவானதுதான். இதற்குக் காரணம், பல ருடைய ஒத்துழைப்பை ஒன்று சேர்த்துச் செயற் படுத்தும் வாய்ப்பு ஏற்படாததுதான்.

   தமிழகத்தின் தலைநகரம் முதல் தொட்டிப்பட்டி  வரையில் உள்ள எல்லாரும் தமிழ் வளர்ச்சிக்குப் பணிபுரிந்து தொண்டாற்ற ஆர்வங் கொண்டிருக்கிறார்ள்கள். அரசாங்கத்திலே முன் அணியில் இருக் கிற அமைச்சர்கள் முதல் குக்கிராமத்தில் உள்ள தொண்டர்கள் வரையில் எல்லோரும் தமிழின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்  தம்மால் இயன்ற தொண்டு செய்ய ஆர்வத்துடன் இருப்பதைக் காண்கிறேம். ஆனால் இந்த ஊக்கத்தையும் உழைப் பையும் பயன் படுத்திச் செயலாற்றுகிற நிலையம் ஒன்று இல்லாத படியினலே, இவை யாவும் பயன் படாமலே வீணாகப் போகின்றன. இத்துறையில், எல்லோருடைய அனுபவத்தையும் ஆராய்ச்சியையும் ஒன்று சேர்த்துப் பயன்படுத்த ஒரு நிலையம் இன்றளவும் ஏற்படவில்லை. இந்தத் தேவையை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. இந்நூலில் கூறப் படுகிற யோசனைகளும் கருத்துக்களும் பகற்கன வல்ல; செய்ய முடியாதவை அல்ல; நிறைவேற்றக் கூடியவை; செய்யக் கூடியவையே.

இந்நூலிலே பல துறைகளைப் பற்றிய கருத்துக் களும் யோசனைகளும் கூறப்படுகின்றன. எல்லோ ருக்கும் எல்லாத் துறைகளிலும் ஆராய்ச்சியும் அனுபவமும் இருக்க முடியாது. ஆனால், ஒவ் வொருவரும் ஒவ்வொரு துறையில் பயிற்சியும் அனு பவமும் ஆராய்ச்சியும் பெற்றிருக்கக் கூடும். அவ் வத்துறையில் பயிற்சியும் அனுபவமும் பெற்றவர் கள் அவ்வத்துறை பற்றித் தமது கருத்தைத்