பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ (இந்த பேராசைமிக்க பெருந்திட்டத்திற்கு பெரும தடையாக இருந்தவர் பெரியதம்பி மரைக்காயர் ஆவார் சேதுபதி மன்னருக்கு பார்பன் கால்வாயை டச்சுக்காரர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் முலம் சேதுநாட்டு அரசுக்கு நல்ல வருமான கிடைக்கும் என்பது உண்மை என்றாலும், தகமைப் போன்ற மரைக்காயர்களது வாணிப மரக்கலங்களும், சேதுபதி மன்னரது கப்பல்களும் பார்பன் கால்வாயை கடந்து செல்வதில் டச்சுக்காரர்களது அனுமதியைப் பெற வேண்டியிருக்கும் என்ற பரிதாப நிலையை சேதுபதி மன்னருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி டச்சுக்காரர்களது பேராசைக்கு பெரியதம்பி மரைக்காயர் முற்றுப் புள்ளி வைத்தார். இத்தகைய ஆலோசனையுடன் செயல் பட்ட சேதுபதி மன்னர், டச்சுக்காரர்கள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு ஏமாற்றுக்காரராகவே தென்பட்டார். இதற்கிடையில் 1697-ல் காயல்பட்டினம் கடலில் முத்தக்குளிப்பதற்கான ஏற்பாடுகளை டச்சுக்காரர்கள் தொடங்கினர். பொதுவாக முத்துக்குளித்தல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கினாலும் அதற்கு முன்னதாகவே பிப்ரவரி, மார்ச் மாதத்தில் முத்துச் சிப்பிகள் கடலுக்கு அடியில் வளர்ச்சி பற்றியும் ஆய்வு செய்வது வழக்கம் காயல்பட்டினம் மணியக்காரரான "பொலிக்காசு மரைக்காயர்” என்பவர் இவ்விதம் முத்துச்சிப்பிகளின் ஆய்விற்குச் சென்றுவிட்டு பரவர் குடியிருப்பு வழியாக பல்லக்கில் சென்ற பொழுது அவரை மேலும் செல்லவிடாமல் தடுத்தும், பல்லக்கை உடைத்தும் அவரை பரவர்கள் திருப்பி அனுப்பினர். இந்த விவரக் அறிந்து ஆத்திரமடைந்த மரைக்காயர்கள் பரவர் குடியிருப்பைத் தாக்கி, அவர்களது குடிசைகளை தீயிட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தினர். இந்தக் தாக்குதலில் கலந்து கொண்ட இரு தரப்பினருக்கும் பலத்த உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. இன்னொரு சம்பவத்தில் அந்த ஆண்டு நடைபெறும் முத்துச்சலாபம் பற்றிய அறிவிப்பினை ام حا