பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம்: கமால் <> r இந்த உலகில் மறந்தும் கூட அரைக்காக பணத்தை தானச்) செய்யாத மனிதர்கள் இருந்தும் என்ன இல்லாமல் போனான் என்ன வள்ளல் சீதக்காதி மீண்டும் இவ்வுலகிற்கு வந்து பிறப்பாரா அவர் வந்து பிறக்காவிட்டால் புலவர்களது | பாடலைக்கேட்டு பரிசு வழங்ககூடியவர் யார் இருக்கிறார்? புலவர்களுக்கு பிழைப்பே இல்லை புகழ மிகுந்த சீதக்காதி மறைந்து விட்டார். மண்ணுக்குள் இதனால் புலவர்களது வாயிலும் மண் விழுந்து விட்டது. இனி எப்படி வாழ்வது? புலவர் பெருமான் படிக்காசு தமiபிரானது வேதனை நிறைந்த எண்ண்ங்களின் வெளிப்பாடே மேலே கண்டவையாகும், அவைகள் புகுந்து புனைந்துள்ள புலவரது பாடல்களை இப்பொழுது கீழே பார்ப்போம். "விண்ணுக்கு மண்ணுக்கும் பேராய் விளங்குதே வேந்தரனெனுங் கண்ணுக் கினிய துரைசீதக் காதி கமல நிகர் பண்ணுக்கிசைந்த வதனசந்த் ரோதய சாமியிந்த மண்ணுக்கு ளேயொலித் தான்புல வோர்முகம் வாடியதே' "மறந்தா கிலுமரைக் காசுங் கொடாமட மாந்தர் மண்மேல் இறந்தாவதென்ன இருந்தாவ தென்ன இறந்து விண் போய்ச் சிறந்தாளுங் காயற் றுரைசீதக் காதி திரும்பிவந்து பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே