பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r فا சூழலில் அந்த ஆவணங்கள் எப்படி மறைந்தன என்பதை கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாக உள்ளது. கி.பி. 1974ல் ரஷ்ய நாட்டில் மக்கள்புரட்சி வெடித்த பொழுது செயிண்ட் பீட்டர்ஸ் வர்க் என்ற ரஷ்ய நாட்டின் தலைநகரை பொடர் கின் என்ற கப்பலிலிருந்து மாலுமிகள் தாக்கியதன் நினைவாக அந்த முழுக்கப்பலை இன்னும் அப்படியே அந்த நாட்டில் ஒர் வரலாற்றுப் பெட்டகமாக பாதுகாத்து வருகின்றனர். இதைப் போலவே கி.பி. 17ஆம் நூற்றாண்டில் பல நாடுகளுக்கும் சென்று வந்த கப்பல் கொள்ளையன் பிரான்சிஸ் டிரேக் என்பவனது கடல் அனுபவ ஆவணங்களும், அவன் பயன்படுத்திய கப்பலின் மாதிரியும் லண்டனில் உள்ள பிரிட்டீஸ் மியூலியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் இது போன்ற எத்தனையோ உதாரணங்கள் இங்கு குறிப்பிடலாம். ஆனால் இதன் திரண்ட கருத்து பழைய ஆவணங்களை மேலை நாட்டவர் மிகுந்த அக்கரையுடன் வரலாற்றுக்கு உதவும் விலைமதிப்பற்ற தொல்பொருளாக காத்து வருகின்றனர். வள்ளலைப்பற்றி அறியக்கூடிய செய்திகள் நமக்கு இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களும் டச்சு ஆவணங்களுமே ஆகும். இவைகள் ஒரளவுதான் வள்ளல் பற்றிய செய்திகளை வழங்குவதாக இருக்கின்றன. அவரைப்பற்றி இதுவரை வெளிவந்துள்ள சில நூல்களும் வள்ளலைப்பற்றிய சரியான தகவல்களை அளிக்காமல் சொந்தக்கற்பனைகளைக் கொண்ட செய்திகளை தருவதாக உள்ளன. குறிப்பாக வள்ளலது பெற்றோர்கள் பற்றிய செய்திகளில் அவர் கீழக்கரை மெளலா அலி என்பவருக்குக் பாத்திமா நாச்சியார் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் என்றும், இரண்டொரு நூல்களில் அவர் காயல்பட்டிணத்தில் பிறந்தவர் என்றும் தவறுதலாக வரைந்துள்ளன. இதற்கான ஆதாரங்களையும் அந்த நூல்களில் கொடுக்கப்படவில்லை. சீதக்காதி மரைக்காயர் கிழக்கரையில் மிகச்சிறப்பாக வாழ்ந்த ஒரு வணிகரது குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதுக் ר اس