பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<CP செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r கிழவன் ரெகுனாத சேதுபதியின் ஆட்சிக்காலம் கி.பி.1678 י முதல் 1770 வரை ஆகும். இந்த காலகட்டத்தில்தான் சீதக்காதி மரைக்காயர் சேதுபதி மன்னரிடர் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். அப்பொழுது சீதக்காதி மரைக்காயரது ஆலோசனையின் பேரில் சேதுபதி மன்னர் தமது தலைமை இடத்தை போகலூர் கிராமத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார் மற்றும் அப்பொழுது மண்கோட்டையாக இருந்த இராமநாதபுரத்தை கற்கோட்டையாக மாற்றியும், அரண்மனை வளாகத்தில் மன்னருக்கான கொலுமண்டபம் ஒன்றையும் அமைக்க சீதக்காதி மரைக்காயர் உதவினார் என இராமநாதபுரம் சமஸ்தான மேனுவல் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கதாக உள்ளது. மற்றும் சேதுபதி மன்னர் தமது குடும்பச்சிறப்புப் பெயரான " விஜய ரெகுநாத" என்ற விருதை சீதக்காதி மரைக்காருக்கு வழங்கி “ விஜய ரெகுநாத பெரிய தம்பி " என அழைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் சீதக்காதி மரைக்காயரை சேது நாட்டின் கடற்கரைப்பகுதியில் தீர்வை வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கியதை டச்சு ஆவணங்கள் குறிப்பிட்டிருப்பதும் சீதக்காதி மரைக்காயர் சேதுபதி மன்னரிடம் இவ்விதம் நெருக்கமான உறவுகள் கொண்டிருந்த காலம் கி.பி. 1682 முதல் கி.பி.1673 வரை என எளிதாக வரையறுக்க முடிகிறது. டச்சு ஆவணங்களில் சொல்லப்படுகின்ற முதலாவது பெரியதம்பியே சீதக்காதி மரைக்காயர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை டச்சுக்காரர்களது ஆவணங்கள் "கி.பி. 682 முதல் 1698 வரை முதலாவது பெரிய தம்பியைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ” என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் சீதக்காதி மரைக்காயருக்கும், கிழவன் ரெகுனாத சேதுபதிக்கும் ஏற்பட்ட முதலாவது தொடர்பு கி.பி 7632 என்பதை நம்பகமாகக் கொள்வதற்கு மேலே கண்ட டச்சு ஆவணம் உதவுகிறது. அப்பொழுது சீதக்காரி மரைக்காயருக்கு வயது 32, அதாவது கி.பி.1650-ல் பிறந்ததாகக் கொள்ளலாம். ஆனால் இதனை