பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <10× r உறுதிப்பபடுத்தக்கூடிய வேறு ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இதனைப் போன்றே சீதக்காதி மரைக்காயரது மறைவு பற்றிய விபரங்கள் அளிக்கத்தக்க ஆவணங்களும் இல்லை. ஆனால் சீதக்காதி மரைக்காயர் கி.பி.1698-ல் புகழுடம்பு (வ:பாத்) பெற்றிருக்க வேண்டும் என்பது உறுதி. இதனை டச் ஆவணம் ஒன்று உறுதிப்படுத்துகிறது. கி.பி. 1698 மார்ச் ஏப்ரலில் துத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்ற டச்சுக்காரர்களது முத்துச் சலாபத்தில் பெரும் இழப்பீடும் தோல்வியும் ஏற்படுவதற்கு சீதக்காதி மரைக்காயர் காரணமாக இருந்தார் என்பதை சேதுபதி மன்னருக்கு தெரிவிக்க டச்சு அலுவலர் ஆதர் வான்டெர் டயன் தலைமையில் துதுக்குழு சென்றது மன்னரிடம் பரிகாரம் பெறுவதற்கு. சீதக்காதி மரைக்காயர் அண்மையில் இறந்துவிட்டதால் அந்தப் பிரச்சனையை அப்படியே விட்டு விடுமாறு மன்னர் அறிவுரை கூறியதிலிருந்து சீதக்காதி மரைக்காயர் பெரும் பாலும் மே அல்லது ஜூன் இறுதியில் 1698-ல் மரணமுற்றிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. இன்னொரு செய்தி. வள்ளல் சீதக்காதி மரைக்காயர் இமாச் சதக்கத்துல்லாலும் அப்பா அவர்களிடம் மிகுந்த மரியாதை உடைய அனுக்கத் தொண்டராக இருந்து வந்தார். ஏதோ ஒரு காரணமாக இமாச் அவர்கள் மரைக்காயரிடம் சற்று கோபமாக பேசிய சில சொற்கள் பலிதமாகி மரைக்காயர் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை சீறாப்புராணத்தைப் பதிப்பித்த காயல்பட்டினர் கண்ண அகுமது மருதும் புலவர் அந்த நூலின் பதிப்பாசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பது மரைக்காயர் அவர்களது மரணத்தை நிர்ணயிப்பதற்கு உதவுவதாக இருக்கிறது. ஏனெனில் இமாச் அவர்கள் கி.பி 7702-ல் வ.:பாத்தாகி விட்டார்கள். அதற்கு முன்னர்தான் மேலே கண்ட நிகழ்ச்சி வள்ளல் சீதக்காதியின் மரணம் நேர்ந்திருக்க வேண்டும் என நம்புவதற்கு ஏற்றதாக உள்ளது. அதாவது இமாம் அவர்களது வ:பாத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1698-ல் வள்ளல் அவர்கள் வ.பாத்தானார்கள் என்பதே. اسر \