பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ W s இதற்கு மேலாக கிழக்கரையில் வழிவழியாக வாணிபச் செழுமையிலும் செல்வ வளத்திலும் சிறந்து நின்ற ராஜ குடும்பத்தையொத்த சீதக்காதி மரைக்காயரது குடும்பப் பெண்களை கச்சேரிக்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்தும் வகையில் நடத்திய கொடுமையையும் அந்த ஆவணங்கள் மூலக் தெரியவருகின்றன. இவைகளுக்கெல்லார் காரணம் அந்த ஆவணங்களில் வரையப்பட்டிருப்பது போல'சிறிதும் புத்தியில்லாத ’ அந்த இளைஞரே. இவ்விதம் யாரும எதிர்பாராத வகையில் சீதக்காதி மரைக்காயரது வழியினருக்கு ஏற்பட்ட ராஜதுரோக குற்றமும், அதன் வழி அவர்கள் பொதுமக்களது பார்வையில் மிகவும் கேவலமாக கருதப்படும் நிலையும் ஏற்பட்டது காலத்தின் கொடுமையேயாகும். எந்த அளவுக்கு சீதக்காதி மரைக்காய்ரது வள்ளல் தன்மையும், மனிதாபிமான நடவடிக்கைகளும் கிழக்கரை மக்களைக் கவர்ந்து அவரை ஒரு மிகச்சிறந்த மனிதராக போற்றிப் புகழ்ந்த காலம் எங்கே? அவரது வழியினருக்கு ஏற்பட்ட தலைக்குனிவும் தாழவும் மக்களது மனத்திலே பல காலமாக நிலைத்துவந்த காரணத்தினால் வள்ளலின் வழியினரைப் பற்றிய விபரங்கள் ஆவணங்களும் நாளடைவில் சிறிது சிறிதாக குறைந்து விட்டன. வள்ளலது வம்சாவழிப்பட்டியலில் கண்டுள்ளபடி சீதக்காதி மரைக்காயருக்கு இருந்த ஒரே மகனான சேகு கண்ணு மரைக்காயரும அவருடைய ஒரே மகனான மீரா சாகிபு மரைக்காயரும் வாரிசு இல்லாமல் அடுத்தடுத்து மரணித்து விட்டதால் அந்தக் குடும்பத்தின் கெளரவத்தையபு மச் ஆவணங்களையும் காப்பதற்கு தக்க சூழ்நிலை ஏற்படவில்லை. மேலே கண்ட இந்தக் காரணங்களினால்தான் வள்ளல் அவர்கள் மறைந்த 300 ஆண்டுகளுக்குள் அவரது குடும்பத்தினர். அவரது வாணிப நடவடிக்கைகள் வெளிநாட்டு தொடர்புகள் சொத்துக்கள் போன்ற விபரங்கள் மக்களது நினைவிலிருந்து அகன்று விட்டன. அவைகளை எதிர்கால சந்ததிகளுக்கு தெரிவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. வள்ளல் அவர்களது கொடையுள்ளத்தை (தெரிவிக்கும்-புலவர்_பெருமக்களது-தமிழிப்பாக்கன்-மட்டும்)