பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் ৰচ> r பெருமக்கள் அந்த ஊர்களை விட்டு கிழக்கரை, வேதாளை) தொண்டி போன்ற ஊர்களுக்கு கி.பி.1537லேயே இடம்பெயர்ந்து குடியேறினர். ஆதலால் இமாம் சதக்கத்துல்லாஹற். அப்பா, தைக்காசாஹிப் வலி, மாப்பிள்ளை லெப்பை ஆலிமீ ஆகியவர்களால் போன்று வள்ளல் சீதக்காதி அவர்கள் குடும்பத்தினர் கிழக்கரைக்குக் குடியேறினர் என்பது சிறிதும் பொருந்தாத உண்மையாகும். மேலும் வள்ளல் சீதக்காதி அவர்களின் தாய்வழிப் பாட்டனாரான வாவா அலி மரைக்காயர் என்பவர் மிகச்சிறந்த வணிகராக கிழக்கரையில் விளங்கி 25.11.1614 -ல் காலமானதையும் அவர்களது முன்னோர்கள் சிலரும் கி.பி. 1604, கி.பி. 1609 ஆகிய ஆண்டுகளில் மரணமுற்றதையும் கீழக்கரை பழைய குத்பாப் பள்ளியில் உள்ள அவர்களது கப்ருஸ்தானின் மீவானிலுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றது. இமாம் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் கி.பி.1654-ல் கீழக்கரையில் குடியேறியவர். இதிலிருந்து வள்ளல் சீதக்காதி மரைக்காயரது முன்னோர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கிழக்கரையில் வாழந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் படுகிறது. மற்றும் படிக்காசுத் தம்பிரானது பாடலில் உள்ள காயல் என்ற ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு காயல் என்பது காயல் பட்டினத்தைக் குறிப்பது என்று கொள்வது பொருத்தமானது அல்ல. தமிழில் காயல் என்ற சொல் உப்பளம் அல்லது உப்பங்கழி என்பதை பொதுவாகக் குறிக்கும் சொல்லாகும். இதனை காயல்பட்டினத்திற்கு மட்டும் உரியது என வலிந்து பொருள் கொள்வது தமிழ வழக்கிற்கு ஏற்புடையது அல்ல. கீழக்கரை நகருக்கு சற்று முன்னதாகவே உப்பங்கழியும், உப்பளங்களும் தொடந்து இருந்து வருவதை இன்றும் யாவரும் காணத்தக்கது.