பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

♔> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r மேலும் இராமநாதபுரம் சமஸ்தான மேனுவலில் உள்ளி ஒரு செய்தி. வள்ளல் சீதக்காதி கிழக்கரை (ஷெய்கு அப்துல் காதர் மரைக்காயர்) என்பவர் இராமநாதபுரம் கோட்டையையும், இராமநாதபுரம் அரண்மனையையும் நிர்மாணிப்பதில் அப்பொழுது இராமநாதபுரம் மன்னராக இருந்த கிழவன் ரகுநாத சேதுபதிக்கு மிகவும் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வள்ளல் அவர்கள் கிழக்கரையைச் சார்ந்தவர் என்பதை மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளிலிருந்து வள்ளல் சீதக்காதி அவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர் என்ற கூற்று பொய்யாகி விடுகிறது. அடுத்து வள்ளல் அவர்கள் இராமநாதபுரம சேதுபதி மன்னருக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்த காரணத்தினால் அவரை ஒரு எல்லைத் தகராறு சமபந்தமாக எட்டையபுரத்துக்கு சேதுபதி மன்னர் அனுப்பி வைத்தார் என்றும் அங்கு அரண்மனையில் உமறுப்புலவரைத் தற்செயலாக சந்தித்தபொழுது கீழக்கரைக்கு வந்து நபிகள் நாயகம் அவர்களது வாழ்க்கை வரலாற்றைக் காப்பிய மாக இயற்றித்தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க புலவர் கிழக்கரை வந்து சீறாப் புராணத்தை பாடினார் என்பது பரவலாகப் பேசப்படும் செய்தியாகும். இதுவும் உண்மைக்கு புறம்பானது ஆகும். ஏனெனில் அப்பொழுது எட்டையபுரத்தில் வாழ்ந்தவர் உமறுப்புலவர் அல்ல அவர்களது சரியான பெயர் உமரு கத்தாப் புலவர். அவர் இயற்றியது சீதக்காதி மரைக்காயரது திருமண வாழ்த்து என்பதாகும், சீறாப்புராணம் என்ற காப்பியர் அல்ல. இந்த பெரும படைப்பை இயற்றியவர் கிழக்கரையைச் சேர்ந்த உமறுப்புலவர் ஆவார். இந்த உண்மையை சீறாப்புராணத்தின் சிறப்புப் பாயிரத்தில் (அச்சிற் பதிப்பித்த வரலாறு) காயல்பட்டனத்தைச் சேர்ந்த புலவர் நாயகர் சேகனாப் புலவர் சீறாப்புராணச் பாடிய உமறுப்புலவர் கீழக்கரையைச் சார்ந்தவர் اس۔ حا