பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <QP r மாநிலத்திற்கு ஆளுநராக பணியேற்றுக்கொள்ள ഗോ கேட்டுக் கொண்டார் என்பது ஒரு செய்தி. இமாம் சதக்கத்துல்லாஹற். அப்பா அவர்களது ஆன்மீகப் பணியையும் அவர் ஒரு சிறந்த சூஃபி ஞானி என்பதையும் முகலாயப் பேரரசர் நன்றாகவே அறிந்திருந்தார். இந்த நிலையில் சூஃபி ஞானியான இமாம் அவர்களை முகலாயப் பேரரசு ஆளுநராக பணியேற்குமாறு கேட்டுக்கொள்வாரா என்பது கேள்விக் குறியானதாகும். மேலும் பேரரசரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத இமார் அவர்கள் தமது அணுக்கச்சீடரான வள்ளல் அவர்களை வங்க நாட்டு ஆளுநராக பணியேற்குமாறு செய்தார் என்றும் அந்த நாட்டு வெப்ப தட்ப நிலைகள் நமது வள்ளல் அவர்களுக்கு பொருந்தாததாக இருந்ததால் சிறிதுகாலத்தில் அவர் கிழக்கரைக்கே திரும்பி வந்துவிட்டார் என்பதும் இந்தச் செய்தியின் முடிவாகும். முகலாயப் பேரரசைப் பொறுத்தவரையில் பாபர் முதல் இரண்டார் பகதூர்ஷா வரை அதாவது கி.பி.1526 முதல் கி.பி.1857 வரையான காலகட்டத்தில் முகலாய ஆட்சியைப் பற்றிய விரிவான அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் பல உள்ளன. அதில் நமது வள்ளல் அவர்கள் வங்க நாட்டு ஆளுநராக சிறிது காலம் பணியாற்றியதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை என்பது உறுதி. மற்றுமொரு செய்தி. வள்ளல் சீதக்காதி அவர்களுக்கும். இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் (கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி) இருந்த மிகவும் அன்னியோன்யமான தொடர்பைக் கொண்டு வழங்கும் செய்தியாகும். சேதுபதி மன்னரது உடன்பிறவாத சகோதரராக விளங்கி வந்த காரணத்தினால் வள்ளல் அவர்களை சேதுபதி மன்னர் கிழக்குக் கடற்கரைப் பகுதியை கண்காணிக்கும் பொறுப் புள்ள அலுவலராக நியமித்திருந்தார் என்பதுதான் டச்சு ஆவணங்களிலிருந்து கிடைக்கும் முக்கியமான செய்தியாகும். \ .است