பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r ஆனால் வள்ளல் சீதக்காதி அவர்கள் வகித்து வத்த) பதவியின் காரணமாக அவர் இராமேஸ்வரர் திருக்கோயிலின் கட்டுமானத்தை மேற்கொண்டிருந்தார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியும் உண்மைக்கு புறம்பானது என்பது தெரியவருகிறது. ஏனெனில் கி.பி.1678 முதல் கி.பி.1710 வரை ஆட்சி யிலிருந்த கிழவன் ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரர் திருக்கோயிலில் எந்தவிதப் பெரிய கட்டுமானத்தை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இராமநாதபுரம் சமஸ்தான கோப்புகளில் காணப்படவில்லை. வழக்கமாக சேதுபதி மன்னர் தங்களது ஆட்சிக்காலங்களில் இராமேஸ்வரர் திருக் கோயிலில் ஏதாவது ஒரு புதிய | கட்டுமானத்தை செய்தும், ஆண்டு விழாக்களுக், அன்றாட வழிபாடுகளும் நடத்துவதற்கு தேவையான நிலக்கொடைகளை வழங்கி வந்திருப்பதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கிழவன் ரெகுநாத சேதுபதிக்கு முன்னிருந்த திருமலை ரெகுநாத சேதுபதி கூட அந்தக் கோயிலில் பிரமாண்டமான இரண்டாவது பிரகாரத்தை அமைத்துள்ளார். ஆனால் என்ன காரணத்தினாலோ கிழவன் ரெகுநாத சேதுபதி பல நிலக்கொடைகளை வழங்கி இருந்தும் கூட கட்டுமானம் எதையும் அங்கு மேற்கொள்ளவில்லை. இத்தகைய நிலையில் உண்மைக்கு புறம்பாக வள்ளல் சீதக்காதி அவர்கள் சேதுபதி மன்னரின் சார்பாக இராமேஸ்வரர் திருக்கோயிலில் கட்டுமானத்தை மேற்கொண்டிருந்தார் என்பதில் துளியும் உண்மை இல்லை. மற்றும் வள்ளல் அவர்கள் வெளிநாடு சென்று திரும்பும்பொழுது கடலில் ஓரிடத்தில் அவரது கப்பல் தடைபட்டு நின்றதாகவும் அது சமபந்தமாக கப்பல் ஊழியர்கள் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தபொழுது கடலுக்கடியில் மிகப்பெரிய பச்சை மரகதக்கல் பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டு அதனை அவர்கள் கீழக்கரைக்கு கொண்டு வந்ததாகவும், அதன் ஒரு பகுதி கிழக்கரைக்கு அண்மையில் உள்ள திருஉத்திரகோசமங்கை الـ فا