பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து r 203. கன்னல் நடுவார் கமுகு நிரைத்திடுவார் அன்னமென வந்துசெம்பொன் னு லத்தி யேந்திடுவார் 204, ஏருலவு தென்காய லெங்கள்செய்தக் காதிமன்னன் பாருலகில் யானைப் பவனிவர மாதரெல்லாம் 205. பாடகங்கள் பூஞ்சிலம்பு பங்கயத்தாள் மீதணிந்து சூடகஞ்சேர் காந்தளங்கை சுற்று மணியணிந்து 206. பட்டுடைமின் னுர்பவனி பார்க்கில்மதன் வாளிநெஞ்சில் பட்டுடையுமென்றுமுலைப் பாரமிசை வாரணிவார் 207. நாணைவிட்டு மங்கலப்பொன் னு னணிந்து கையரத்தால் சாணை வைத்த வாள்போல் தடங்கணுக்கு மையெழுதி 208. பொற்சரிகை மேலணிந்த பூம்பட்டு முந்திதனில் பொற்சரிமை தொங்கலிடைப் பொய்யினில் மெய் யாயணிந்து 209. சித்தசன்பைந் தேனுறையுஞ் செம்பவள மீதிலொரு முத்த ரும்பினபோல் மூக்குத்தி முத்தணிவார் 210. பொன்மலைமேல் வெள்ளிப் புரிகிடந்து தாழுதல்போல் வன்முலைமேல் முத்து வடங்கள் கிடந்தாட 21. மாலாழி நீந்த வசையறியா மங்கைநல்லார் காலாழி பூட்டியபின் கையாழி யிட்டனரே 212. தங்கச் சவடிகளுந் தானிழைத்த பொற்பணியும் பொங்குநவ ரத்னவொளிப் பூடணமும் மேற்புனைந்தார் 213. மச்சு னிருக்கும் மடவார்கள் கோத்தமுத்துக் குச்சு னிருக்கும் குள ைலணியாடச் 214. சொல்லிய பட்டுச் சுளிகைரவிக் கையணிந்து எல்லமையுங் கொம்பனையா ரெல்லோருந் தாம்கூடி 215. கொங்கைமேல் சந்தனக் குழம்பணிந்து குங்குமத்தைச் செங்கரத்தால் வாங்கித் திருக்கழுத்தின் மேல்பூசி 216. முல்லையிருள் வாசிமுகிழ்மல் லிகைகொழுந்து அல்லனைய கூந்தற் கழகா யலங்கரித்துச் 217. சாரும்பவளந் தனைச்சிவப்பக் காய்ச்சினபோல் சேரும் படிபாக்குத் தின்று சிறப்பாகத் حا