பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<& வள்ளல் சீதக்காதி r י 245. தார்ப்புயத்தைச் செஞ்சந் தனம்ஒளித்துக் கொண்ட தென்றோ வார்திகழும் பூஞர் மணித்தனங்கள் காட்டி நின்றீர் 246. கண்டசர மெங்கோன் கழுத்தை மறைந்த தென்றோ விண்ட சரமாக மேலாடை நின்றதென்பார் | 247. துலக்கும் வயிரத் துறாமுடியைச் சூழ்ந்ததென்றோ இலங்கும் பெருங்காத லென்னமுடி யாதுநின்றீர் 248. மாலைக் குழல்சரிய வச்சிரப்பொற் கொப்பசைய ஓலைக் குழையாடி ஓடிவந்து பார்ப்பாரும் 249. செல்லுலவு செந்தூள் திரளால் தெரியாமல் மெல்ல விழிமேல் விரலடுக்கிப் பார்ப்பாரும் 250. தரிக்குஞ் சவாது மணம் தான்வீச வந்ததெல்லாம் பரிக்குமிதழ்ச் செங்கமலப் பாவைமணம் வேண்டிஎன்பார் 251. கஸ்தூரி வாசமெழு காதமட்டும் வீசநம்மை முத்தாரப் பூண்முலையார் முகமட்டும் என்றுரைப்பார் 252 ஓங்குசனங் காணநம்மை ஓடாதிப் போதான தூங்கலென நின்று துரிதநடை பாரும் என்பார் 253. வெற்றிப் பகலோனை மேக மறைத்ததெனக் கொற்றக் குடைமறைத்துக் கொள்ளுமோ என்றயர்வார் 254. வந்தானை மூர்க்க மதயானை முன்னடக்க முந்தானை விட்டு முலையானைகாட்டிநிற்பார் 255. வாய்மழலைப் பிள்ளைமதிபோலும் பேதையர்கள் தாயர்தமைக் குங்குமப்பூத் தார்வாங்கித் தாரும் என்பார் 256. உண்டில்லை யென்னுமிடை யொன்றியுமொன் றாய்ச்சோர வெண்டரளஞ் சேர்பெதும்பை மின்னர்கள் சூழ்ந்துவர 257. வண்டணுகாகச் செவ்வாய் மலரவிழுந் தாமரைபோல் கண்டமட மங்கையர்கள் கண்குளிரப் பார்த்துநிற்பார் 258. கரிக்கொம்பு போலுமுலைக் கண்டமடந்தை மார்கூடி நரிக்கொம்பு முள்ள நயக்கார னென்பாரும்