பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் o (கீழைக்கரையில் தங்கியது பற்றிய வரலாற்று ஆவணங்கள்) கிடைக்கப்பெறவில்லை. பெரும்பாலும் இந்த அரபிமுஸ்லிம்கள் இன்றைய கிழக்கரை நகரின் கிழக்குத் தெருவுக்கு அப்பால் குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அதற்கான தடையங்களாக அங்கு அழிந்து போன குளங்களும், மணல் திட்டுக்களும் உள்ளன. இந்த வணிகர்கள் இந்த பகுதியில் வணிகம் செய்தபொழுது கி.பி. பதினான்கார் நூற்றாண்டு தொடக்கம் வரை இங்கு செலாவணியாக தங்களது நாட்டின் தங்க φ σουσα/ ωρ σοσ7 3) συσσοοοσαγωδ. வெள்ளி நாணய மான திர்வுற மையு ம பயன்படுத்தி வந்தனர். இந்த இரண்டு நாணயங்களும் ஏற்கெனவே திருக் குர்ஆனில் சூரா 12:20-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் முறையே 'தினாரா” எனவும் "திரம்மா” எனவும் தமிழ் மக்களால் வழங்கப்பட்டதை பல கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாக மதுரை, தஞ்சை, திருப் புத்து.ார். அருப்புக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, குடுமியான்மலை, திருப்பராய்த்துறை, திருவடந்தை ஆகிய ஊர்க் கல்வெட்டுக்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. மேலும் இந்தப் பகுதி அஞ்சுவண்ணங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட திர்ஹமச் என்ற வெள்ளி நாணயம் “அஞ்சுமேனி திரம்மம்' என பெயரிடப்பட்டிருந்ததாக பேராசிரியர் அப்பாத்துரை அவர்கள் குறிப்பிட்டுள்ளர்கள். மேலும் இன்று வழக்கில் உள்ள கீழக்கரை என்ற நகர் பதினைந்து, பதினாறாவது நூற்றாண்டுகளில் அனுத்தொகை மங்கலம் என்ற பெயரில் வழங்கப்பட்டதை கீழக்கரை சொக்கநாதர் கோவிலில் இருந்து படி எடுக்கப்பட்ட கல்வெட் டுக்களிலிருந்து தெரிய வருகின்றது. இந்த கல்வெட்டுக்கள் கி.பி. பதினாறாவது, பதினேழாவது நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும். இவைகளில் கி.பி.1531 لـ