பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<& வள்ளல் சீதக்காதி r ~ 380. பொன்னிட் டகப்டை புதுச்சித்ர வெள்ளிமிடா மன்னுமிரு கால்சேர் மணிவயிரப் பாக்குவெட்டி 381. செம்பொற் கரண்டகமும் சீவிவைத்துத் தான்முடியும் பைம்பொன்முடி சீருமுதல் பாங்காக வேகொடுத்தார் 382. விற்பூட்டுப் பெட்டகமும் மேவியொளி சேர்கனகப் பொற்பூட்டுப் பூட்டிப் பொருந்துநிலைப் பெட்டகமும் 383. வெள்ளியி ைல் குத்து விளக்குடன்வெண் பட்டுமெத்தை கொள்ளுந் தழுவனையுந் கூறுசப்ரக் கொள்கையுடன் 384. கூறிய பொற்கொட்டுக் கூடைதங்க சட்டுவமும் வீறிய காந்தியெங்கும் வீசுவெள்ளி வெண்குடமும் 385. பொன்னரிக்கஞ் சட்டி குதுச்சித்ர வெள்ளிமிடா மன்னு சிறுகுடங்கள் வாய்குவிந்த பொற்கலசம் 386. மாந்தளிர்செம் பட்டு வருமேக வர்ணியுடன் ஏந்தபுள்ளிப் பட்டோ டிளமா துளைச் சேலை 387. இச்சைக் கினிதா யிசைந்த மணிக்கிணங்கி பச்சைக் கிளியுமந்தப் பஞ்சவர்ணப் பூங்கிளியும் 388. பலமணிக ளிட்டாடும் பல்லாங் குழியுமின்னுர் நலமனையி லாடும் நவரத்ன வம்மனையும் 389. உமிழும் படிக்கம் உயர்படிக்க முங்கலமும் கமலப் படிக்கம் காளாஞ்சிச் சேனெய்க்கலம் 390. கட்டிவருஞ் செம்பவளக் கட்டில்தலை காணிமெத்தை இட்டமக லாதே யிருக்கவந்த பாங்கியரும் 391 தாளடியில் நின்று தலைபணிந்து வேலைசெய்ய ஆளடியா ராயிரமும் ஆண்டியா ராயிரமும் 392. செப்புந்தைய லார்நினைந்த சீவரத்னம் வைக்குமுத்துச் செப்புந் தாலாவும் செய்யபொன்னின் வட்டாவும் 393. சிந்தைமகிழ் கின்றதந்தச் சீப்புஞ் சினுக்கரியும் வந்தவரைத் தன்னிடத்தில் வைக்கும் நல்ல ஈர்கொலியும் \ اما