பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி → முறுக்கிட்ட பாளாசு -தனைவிட்டு முறுக்குப் போட்டுச்சுறு சுறுக்குடனே சறுக்காமல் விழிப்புடனே -குசைக்கச்சைத் தாங்கி வெளியில் மெள்ள வாங்கினனே ( 112 ) வெளிக்கொண்ட குதிரையின்மேல் -அடியேன் மேற்கொள்ள வேண்டுமென் றாக்ரமித்தேன் கழிக்கம்புச் சோணங்கிநாய் -விழித்தென்னைக் கலைத்திட வொருசத்தங் குலைத்திடவே ( 113 ) சடுதில்நாய் குலைத்ததென்றே -உறங்கிய சாணிப் பயல்களும் பட்டாணிகளும் திடுதிடென் றோடிவந்தே -குதிரையைத் தேடினார் சுற்றும்பிற்று மோடினாரே ( 114 ) தக்காது குதிரையென்றே -விட்டொளிக்கத் தலமற்று நடக்கப் பலமுமற்றுப்போய் பக்காழிப் பொதியெடுக்குந் -துருத்திக்குள் பதுங்கிக்கொண் டொருபுற மொதுங்கினனே ( 115 ) பறிபட்டுத் தேடினபேர் -முறுக்கிட்டுப் பாயும் புரவிநின்ற சாயல்கண்டே தெறிபட்ட கள்ளனையே -பதனமாத் தேடும் வழிக்காவல் போடுமென்றர் ( 116 ) பந்தமும் பகல்வத்தியுந் -தீவட்டியும் பார்த்த திசையெலாங்கண் பூத்திடவே அந்தவல் லிருட்டை யெல்லாம் -பட்டப்பக லாக்கினார் திசையெங்கும் நோக்கினாரே ( 117 ) தெற்றிய குடிசைகளும் -புல்லுக்கட்டும் திரைகளும் காணக்கொப் பரைகளுடன் சுற்றிய விடுதிகளும் -இடம்பெறச் சோதித்தா ரென்று மனம் பேதித்தேனே ( 118 )