பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் <&P r ר பெரியோர் பெருந்தலையார் -இல்லாமல் பேயும் நாயுமயிர் பிடித்திழுத்துத் தரியா தெனைநடத்திக் -கொண்டுபோய்த் தாவூது கான்முன் னேவிடுத்தார். ( 133 ) பட்டாணி ராவுத்தர்மார் -துரைமக்கள் பாளையக் காரர்கள் அனைவோரும் அட்டான தேசத்துண்டோ -கள்ளனிவன் அடக்கமும் ஒழுக்கமும் பாருமென்பார் ( 154 ) எல்லோரு மொருமுகமாய்க் -கூடிவந் திருக்கிற சமயத்தி னெருக்கத்திலே நில்லாமல் துரத்துமென்பார் -தவறுசெய் நெறிகேடன் தன்முகத்தில் அறையுமென்பார் ( 135 ) வெட்டவா ளுறைவிடுவார் -கோபித்து மிதிப்பார் சவுக்கெடுத்து வீசுமென்பார் கிட்டவா வெனவுதைப்பார் -ஏதென்று கேட்பார் நல்லபலன் கிடைத்ததென்பார் ( 136 ) ஆரிவன் காணுமென்பார் -நேற்றெல்லாம் ஆண்டியாய்த் திரிந்தவன் காணுமென்பார் பாரிவன் துணிவையென்பார் -ஆள்விட்டுப் பார்க்கப் படாதிவன் மார்க்கமென்பார் ( 137 ) உடந்தையாய்த் திரிந்தானென்பார் அளவிட்டு மொட்டைக்காட்டில் முழக்கம்பு வெட்டு வானென்பார் திடந்தனைப் பாருமென்பார் -மணலையுந் திரிப்பான் கல்லில்நா ருரிப்பானென்பார் ( 138 ) களவுசெய் பாதகனை -துரைமக்கள் கண்ணாரப் பார்க்கவு மொண்ணாதென்பார் பிளவுசெய் தெறியுமென்பார் -வாஞ்சித்த பேரைப் பொறுபொறென்று பூரையிட்டு ( 139 ) ار