பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி சொத்தவை. இன்றைய கிழக்கரையின் பண்டகசாலை தெரு) ஜின்னா தெரு, பிரபுக்கள் தெரு, ஒடக்கரைத் தெரு,மேலத் தெரு ஆகியனவெல்லார் அழிந்துபோன அனுத்தொகை மங்கலம் நகரின் வடக்குப் பகுதியாக இருந்து ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட புதிய குடியிருப்புப் பகுதிகளாகும். இந்தக் கடல் அழிவில் அனுத்தொகை மங்கலமாகிய கீழக்கரை துறைமுகம் முழுமையாக கடலில் ஆழ்ந்து விட்டதுடன் கடல் நீர் நிலப்பரப்பில் புகுந்து இன்றைய சின்னக்கடை விதி வரை பரவி நின்று பிறகு நீர் வழிந்து இன்றைய துறைமுகமாக காட்சி தருவது பழமையை நினைவூட்டுவதாக உள்ளது. மேலும் அப்பொழுது கடல் நீர் நிலப் பரப்பில் புகுந்து பல நாட்கள் அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்ததின் காரணமாக இன்றைய கடற்கரையின் வடக்கு தெற்கு பகுதிகளில் நிலம் கடலுள் முந்திச் சென்று (முன் சென்று) அமைந்த அந்த இரு முந்தல்களுக்கிடையில் கடற்கரை வில் வடிவில் வளைவாக அமைந்து காணப்படுவதும் இதற்கு தகுந்த சான்றாகும். மற்றும் இன்றைய பண்டகசாலை தெருவிற்கு சற்று தெற்கே உள்ள கடற்கரைப்பகுதி இன்றும் இறங்கு துறை என வழங்கப்படுவதும், அந்தப்பகுதியில் தோணிகள் நிறுத்தப்பட்டு சரக்குப் பொதிகள் இறக்கப்பட்டதும் இதற்கு காரணமாகும். கிழக்கரை என்ற பெருநகரைப்பற்றிய தொன்மையான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இந்த ஒரு காரணத்தினால் இந்தப் பெருநகர் சமீப காலத்தில் ஏற்பட்டதென்று முடிவுக்கு வருதல் பொருத்தமானதாகாது. காரணம் இதே கிழக்குக் கடற்கரையில் சற்று வடக்கே ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள அழகன்குளம் என்ற ஊரில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த சில தொன்மையான பொருள்களைக் கொண்டு அந்த ஊர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது முடிவு سیس حا