பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <o ് കെമധ് டுள்ளது. அங்கு கிடைத்துள்ள ரோமானியர்களது மட்பாண்டங்கள், சங்கு பொருள்கள், ரோமப் பேரரசரது வெள்ளிப்பனர், மணிக்கற்கள் போன்றவைகள் அந்த ஊரின் தொன்மையை துலக்குவதாக உள்ளன. இதற்கு முன்னால் அந்த ஊரின் சிறப்புகளை தெரிவிக்கக்கூடிய வரலாற்று ஆவணங்கள், சான்றுகள், இலக்கியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் அந்த ஊருக்கு இல்லை. ஆனால் கிழக்கரையைப் பற்றிய காலச்சுவடுகளான வரலாற்று ஆவணங்கள் கிடைக்காத பொழுதும் இந்தப் பெரு நகர் மிகப் பழமையானது என்பதை எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.