பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (நன்கு கணித்த பிறகு இவைகளை கடலுக்கு அடியிலிருந்து) வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்யப்படுகின்றன. இதனை “முத்துச்சிலாபம்” அல்லது முத்துக்குளித்தல் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். நமது கிழக்குக் கடற்கரைக்கு எதிரில் இலங்கைக் கடற்கரையில் இதே பொருளில் "சிலாபத்துறை” (CHILAW) என ஒரு ஊர் அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளிலேயே பரப்பளவிலும், நிறையிலும், வெண்மை நிறத்திலும் சிறப்பானதாகக் கருதப்பட்ட முத்துக்கள் இந்த மன்னார் வளைகுடாப் பகுதியில்தான் கிடைத்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த முத்துக்களைக் கடலிலிருந்து வெளிக்கொணரும்பணி (சிலாபம்) பொதுவாக ஆண்டில் இருமுறை நடைபெற்று வந்தன. முதலாவது சிலாபம் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும், இரண்டாவது சிலாபம் அக்டோபர் நவம்பர் மாதங்களிலும் நடைபெற்றுவந்ததாக தெரிய வருகிறது. சோழ, பாண்டிய மன்னர்களது ஆட்சிக்குப்பிறகு முத்துச் சிலாபத்தில் மிகுதியாக காயல் பட்டினம், கீழக்கரை மரைக்காயர் மட்டும் தமிழ்நாட்டில் முத்துவனிகத்தில் ஈடுபட்டு பெரும் ஆதாயத்தை ஈட்டிவந்தனர். இதன் காரணமாக முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான கீழக்கரை முஸ்லிம் குடும்பங்களில் அவர்களது முன்னோர்களைக் (பாட்டனார்) குறிப்பதற்கு "முத்துவாப்பா” என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். கிழக்கரை துறைமுகத்தில் முத்துக்களை விற்பனை செய்வதற்காக "முத்துப்பேட்டை'ஒன்று இருந்ததாக கீழக்கரை சொக்கநாதர் கோவில் கல்வெட்டு தெரிவிக்கின்றது. மற்று ர் இதே கடற்கரையிலுள்ள பெரியபட்டனத்தில் முத்துப்பேட்டை என்ற பெயரிலும் இராமேஸ்வரம் நகரில் முத்துச் சாவடி என்ற பெயரிலும் முத்துக்கள் விற்பனைக்கான நிலையங்கள் இருந்தது தெரிய வருகிறது. اس فا