பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் KE தமிழ்நாட்டில் முத்துக்குளித்தலுக்கு முன்னோடியாக அரபு) நாட்டிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான் முறையாக இந்த முத்துக்குளிக்கும் கலையை தமிழக முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முத்துக்குளித்தல் இங்கு நடைபெற்றதைக் குறிக்கும் தொன்மையான ஆவணம் உலகப் பயணி மார்க் கோபோலோ உடையதாகும். அவர் சீனநாட்டிலிருந்து அவரது தாயகமான போர்ச்சுக்கல் நாட்டிற்குச் செல்லும் வழியில் கடல் கொந்தளிப்பினால் அவரது மரக்கலம் உடைபட்டு அவர் பாண்டிய நாட்டு கடற்கரையில் ஒதுக்கப்பட்டார். இது நிகழ்ந்தது கி.பி.1274 ஆகும். அவர் இந்தப்பகுதியின் பாண்டிய மன்னர், மக்களது பழக்கவழக்கங்கள் ஆகியவைகளை விவரிக்கும் பொழுது அப்பொழுது நடைபெற்ற முத்துக்குளித்தல் ஒன்றினையும் விவரமாக வரைந்துள்ளார். முத்துக்குளித்தலுக்கு புறப்படும் படகுகள் "பத்தலார்” என்ற இடத்தில் கூடி பின்னர் அங்கிருந்து கிழக்கே 60 கல் தொலைவிற்குச் சென்று முத்துக் குளித்ததாகவும், அந்த முத்துக்குளித்தலுக்கு தகுதியானவர்கள் கால்களில் சிறுகல்லைக்கட்டிக்கொண்டு கடலுக்கு அடியில் சென்றதாகவும், அந்த கல்லில் கட்டப்பட்ட கயிற்றின் துனி ! படகில் இருந்தவர்களது கையில் இருந்ததாகவும், முத்து சேகரிப்பதற்காக கடலுக்குள் சென்றவர் முத்துச்சிப்பிகளை சில நொடி நேரத்தில் ஒரு கூடையில் சேகரித்த பிறகு அந்தக் கயிற்றை அசைத்தவுடன் படகில் இருந்தவர்கள் கயிற்றை இழுத்து முத்துக்குளித்தவரை கடலுக்கு மேலே படகிற்குள் துக்கி விட்டதாகவும் மார்க் கோபோலோ குறிப்புகளில் காணப்படுகின்றன. மேலும் அந்தக் குறிப்புகளிலிருந்து முத்துக்குளிப்பவர் கடலுக்குள் குதிப்பதற்கு முன்னர் அந்தப்படகில் உள்ள மந்திரவாதிகள் முத்துக்குளிப்பவருக்கு தீங்குகள் செய்யாதவண்ணம் சுறா, திருக்கை மீன்களின் வாய்களை மந்திரத்தால் கட்டி விடுகின்றனர் என்றும் குறித்துள்ளார். அந்த மந்திரவாதிகளுக்குப் பெயர் "கடல்கட்டிகள்” (கடலைக்க்ட்டுபவர்கள்)என்பதாகும்.இந்த \- اسر