பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி |r கொண்டிருந்த வெறுப்பு காரணமாகவும் போர்ச்சுக்கீசியர் கோழிக்கோடு போன்ற நகரங்களில் மிகுந்த வெறியுடன் நடந்து கொண்டதை போர்ச்சுக்கல் நாட்டு வரலாற்று ஆசிரியரான "டான்வெர்"விவரித்துள்ளார். கோழிக்கோடு நகரிலுள்ள முஸ்லிம்களது தொழுகைப்பள்ளியை குதிரை லாயமாக மாற்றியதையும் அங்குள்ள முஸ்லிமச் கன்னிப்பெண்களை நூற்றுக்கணக்கில் சிறைப்பிடித்து கோவாவிற்கு அழைத்துச் சென்று வன்முறையில் மதமாற்றம் செய்து கிறித்தவ வீரர்களுக்கு திருமணம் செய்து வைத்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். - ஆனால் தமிழகத்தின் கிழக்குக்கரையின் பல ஊர்களில் உள்ள முஸ்லி மக்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த போர்ச்சுக்கீசியரது போக்கில் இத்தகைய வெறுப்புணர்வு ஏற்பட்டதாக வரலாற்றில் காணமுடியவில்லை. மாறாக நாகப்பட்டினம் காஜா அகமது மரைக்காயர் போன்ற பெரும் முஸ்லிம வணிகர்கள் போர்ச்சுக்கீசியரிடம் மிகுந்த பரிவும், பற்றுக் கொண்டிருந்ததையும், அவர்களது வணிகத்திற்கு பல வகையிலும் உதவி புரிந்ததையும் வரலாறு விளம்புகிறது. எத்தகையதொரு இணக்கமான சூழநிலையில் கீழக்கரையில் முஸ்லிம்களும் போர்ச்சுக்கீசியரும் வாழந்து வந்தனர் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். ר