பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி י (தமிழ் இலக்கியமாகிய "ஆயிரம் மசாலா" என்ற அதிசம் புராணத்தை கி.பி.1572-ல் இயற்றிய வண்ணப் பரிமளப் புலவர் என்ற முகம்மது இஸ்ஹாக் புலவர் அவர்கள் கீழக்கரையைச் சார்ந்தவர். அவரது பணி இலக்கிய உலகிற்கு முன்னோடியாக அமைந்தது. இவ்விதக் கீழக்கரை ஆன்மீகத்துறையிலும், அரபிமொழி வளர்ச்சியிலும், தமிழ் இலக்கியத்துறையிலும் சிறப்பான நிலையினை எய்தி இருந்ததைப் போன்று வணிகத்துறையிலும் செர்மாந்து நின்ற சோனகர் பெருமக்களைப் புகழ்ந்து பாடுக் பொழுது "வானது நாணக் கொடையால் உலகை வளர்த்து அருளும் சோனகர்” என்று குறிப்பிட்டுள்ளனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் வந்திறங்கிய அரபி முஸ்லி ம வணிகர்கள் தொடக்கத்தில் இங்குள்ள அரிய பொருள்களை வாங்கிச் செல்வதில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தமிழகத்தில் நிலைத்து தமிழர்மக்களுடன் ஒன்றிணைந்து தமிழ் முஸ்லி மக்களான பிறகு இங்கு கிடைக்கும் முத்து, சங்கு, வாசனைப் பொருள்கள் ஆகியவற்றினை கொள்முதல் செய்வதில் முனைந்து நின்றனர். பின்னர் அரபுக்குதிரைகளை இங்கு விற்பனை செய்வதிலும், அவர்களுக்கு தக்க பயிற்சிகளை அளிப்பதிலும், வைத்திய வசதிகளை செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியான இந்த மறவர் சீமையில் பல ஊர்களில் அவர்கள் நெசவுத்தொழிலிலும் ஈடுபட்டிருந்ததை இன்றும் அருப்புக்கோட்டை, பரமக்குடி, எமனேஸ்வரர், எக்ககுடி பனைக்குளம், சித்தார்க்கோட்டை ஆகிய ஊர்களில் வழக்கில் உள்ள "பாவோடி தெரு’ என்ற சொல் புலப்படுத்துகிறது. முந்தைய கீழக்கரையிலும் முஸ்லி மக்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பதை கீழக்கரையின் கிழக்குப் பகுதியிலுள்ள "பருத்திக் காரத்தெரு’ என்ற பகுதி அதனை (தெரிவிப்பதாக இருக்கிறது. اسـ