பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K32 செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (குழப்பமடையச்செய்யும் வகையில் அமைந்துள்ளன. அத்த) ஆவணங்களின் படி சீதக்காதி மரைக்காயரது குடும்பத்தினர் அனைவருமே "பெரிய தம்பி” என்ற பெயருடன் வழங்கப்பட்டனர் என்றும், குறிப்பாக கி.பி.1680 முதல் கி.பி.1715 வரை பெரியதம்பி என்ற பெயரில் மூவர் இருந்ததாக குறிப்பிட்டு மரைக்காயர் அவர்களது வழியினர் பற்றிய விபரங்கள் ஆய்வாளர்களை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளது. மேலே சொல்லப்பட்ட கிழக்கரை ஆவணம், வேதாளை கல்வெட்டு ஆகிய இரண்டு சான்றுகளும் வள்ளல் சீதக்காதி அவர்களது குடும்பத்தில் அவரது தந்தையாருக்கும், அவருக்கும் மட்டுமே அவர்களது இயற்பெயர் "பெரிய தம்பி” என்ற சிறப்புப் பெயரு இருந்து வந்ததைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. இவர்களது முன்னோர்களுக்கும். இவர்களுக்குப்பின் வந்தவர்களுக்கும் பெரியதம்பி என்ற பட்ட பெயர் இருந்ததாக எந்தச் செய்தியும், ஆவணமும் இதுவரை கிடைக்கப் பெற வில்லை. இந் நிலை யில் வெளிநாட்டவரான டச்சுக்காரர்கள் இதனைத் தெளிவாக புரிந்து கொள்ளாமல் சீதக்காதி மரைக்காயருக்கும், அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்குமே “பெரிய தம்பி” என்ற பட்டப்பெயர் இருந்ததாகக் குறிப்பிட்டு சீதக்காதி மரைக்காயரது காலத்தை அறுதியிட்டு வழங்குவதை திசைதிருப்பி உள்ளனர். தமிழக முஸ்லிம்களது வரலாற்றைக் கணிப்பதில் ஏற்கெனவே உள்ள இடர்ப்பாடுகளுக்கெல்லார் மேலாக டச்சுக்காரர்களது இந்த தவறும் மிகப்பெரிய இடர்ப்பாடாக விளங்கி வருகிறது. ஆனால் வள்ளல் சீதக்காதி அவர்களது முன்னோர்கள் எந்தெந்தக் காலங்களில் எவ்விதமான வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை. என்றாலும் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் முத்து வணிகத்திலும், எதிர்க்கரையான இலங்கை நாட்டின் விளைபொருட்களான கொட்டைப்பாக்கு, கருவாப்பட்டை, اسر حا