பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் @ י (கிராசபு, ஏலம், ஜாதிக்காக, ஜாதிப்பத்திரி போன்ற வாசனைப்பொருள்களை கொள்முதல் செய்து விற்பதிலும் ஈடுபட்டிருந்தார் என்பதை அவரது சமகாலத்தவரான டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியாரது ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றும் மரைக்காயர் அவர்கள் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் சீமைகளில் நெசவு செய்யப்பட்ட கைத்தறித்துணிகளையும் வாங்கி, அரிசியையும் கொள்முதல் செய்து விற்பதிலும், மலையாள நாட்டில் விளையும் மிளகு, தேங்காய் முதலியவைகளையும் கொள்முதல் செய்து விற்பதிலும் ஈடுப்பட்டிருந்தார். இந்தப் பொருள்களுக்கு மரைக்காயர் அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் அன்றைய சந்தை விலையாக மதிக்கப்பட்டது. இவை தவிர தென்கிழக்கு ஆசிய . நாடுகளிலிருந்து கொள்முதல் செய்த பொருள்களின் பட்டியல் சுருக்கமாக அவர்களது திரு மன வாழ்த்து இலக்கியத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன. 7. சீனநாட்டிலிருந்து சருக்கரை, 2. அச்சைன் நாட்டு குதிரைகள் 8. ஈழநாட்டு யானைகள் சி. வங்கநாட்டு புனுகு 5. மலாக்காநாட்டு கஸ்தூரி, அம்பர்கற்பூரம், குங்குமப்பூ, பன்னிச் 6. மரகதம், வைரம், வைடுரியம், நீலம், நாகரத்னம், புட்பராகர், கோமேதகம், பதுமராகம், பவளம், முத்து ஆகிய நவமணிகள். இந்தப் பொருள் அனைத்தும் மரைக்காயர் அவர்களது வாணிபச் சிறப்பிற்கும், செல்வச் செழுமைக்கும் எடுத்துக்காட்டாக | 2-677677607. இத்தகைய செம்மாந்த நிலையில் வள்ளல் அவர்கள் விளங்கிய காரணத்தினால் அவரை "வகுதை நாட்டு மன்னன்” என்றும், "வச்சிராபுரிக்கு இறைவன்” என்றும் حا