பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் @ (தனுக் கோடியிலிருந்து தொடரப்பட்டதாக இந்து சமயநூல்கள்) குறிப்பிடுவதால் அந்த தனுக்கோடியை சேது மூலம் என பல இலக்கியங்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இராவன சம்ஹாரத்திற்குப் பிறகு சீதாப் பிராட்டியுடன் இராமேஸ்வரம் கடற்கரை வந்த இராம பிரான் அங்குகடல் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபாடு செய்ததாகவும், அதனையும் சேது அணையையும் கண்காணித்து பராமரித்து வருமாறு அப்பொழுது இராமேஸ்வரத்திலிருந்த மறவர் இனத்தலைவரை அறிவுறுத்தினார் என்பது அவரது வழியினர்தான் சேதுபதி மன்னர்கள் என்பது பெரும்பாலோரது ந ம பிக் கையாகு ச். அப்பொழுது சேது நாடு சோழ மண்டலத்திலுள்ள திருவாரூர் மன்னார்குடி நகரங்களை வடக்கு எல்லையாகவும், திருச்சி, மதுரையை அடுத்த கள்ளர் சீமையை மேற்கு எல்லை பாகவும், திருநெல்வேலி ச்சி ைம யின் வடபகுதியான வேம்பாற்றங்கரையை தெற்கு எல்லையாகவும், பரந்துகிடந்த வங்கக்கடலினை கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஒரு பெரு நாடாக விளங்கியதுடன் தமிழரது விரத்திற்குச் மான உணர்வினுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த சேதுபதி மன்னர்களது புகழபரந்த பெருநிலமாகவும் விளங்கி வந்தது. இந்த நாட்டினை திறம்பட ஆட்சிபுரிந்து வந்த திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் திடீரென காலமாகி விட்டதால் இந்த நாட்டில் பல பிரச்சனைகள் பயங்கரத் தோற்றத்துடன் எழுந்தன. ஏற்கெனவே தங்களது நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள நிலப்பரப்பை இழந்துவிட்ட தஞ்சை மன்னர் அதனை மீண்டும் சேதுபதியிடமிருந்து மீட்டுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். மதுரை நாயக்கப்பேரரசுக்கு நிகராக விளங்கி வந்த சேதுபதி சீமையை எப்படியாவது கைப்பற்றுவது என்ற நோக்கத்தில் மதுரை நாயக்கமன்னர் ஈடுபட்டிருந்தார். இவைகளுக்கெல்லார் மேலாக சேதுநாட்டில் ஆங்காங்குள்ள பாளையக்காரர்களும் சேது நாட்டின் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயன்று வந்தனர். இந்த மன்னர்களைப் பற்றிய வரலாற்று ஆவணங்கள் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு اس- ـحا