பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பதிப்புரை” கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி என்ற வழக்கு தமிழகம் அனைத்தும் வழங்கி வருவது யாவரும் அறிந்ததே. கீழக்கரையைச் சேர்ந்த சீதக்காதி மரைக்காயர் வள்ளல் மட்டும்தானா? அல்ல. அவர் ஒரு வணிக வேந்தர். சேது நாட்டு நிர்வாகத்திற்கு உதவிய ராஜதந்திரி. தமிழ் புலவர்களை ஆதரித்த கொடை நாயகர் நல்ல இஸ்லாமியர். இப்படியான பல்துறைச் செல்வராக விளங்கிய வள்ளல் சீதக்காதி மரைக்காயரை இன்று நாம் ஒரு வள்ளலாக மட்டும் கற்பனை செய்து கொள்கிறோம். அத்துடன் அந்தக் கற்பனையிலே இன்னும் பல விதமான கட்டுக்கதைகளும், அவரது வாழ்க்கையில் நடைபெறாத பொய்மைச் சம்பவங்களும், பொருத்தமற்ற சய்திகளும் அந்தக் கற்பனையில் கலந்து சீதக்காதி மரைக்காயரைப் 1றிய ஒரு தவறான வடிவத்தை தமிழ் மக்களுக்கு வழங்கிக் காண்டிருக்கிறது. இந்த வள்ளலைப்பற்றிய ஆவணங்கள் பல இருந்தும் அவைகளை இதுவரை யாரும் ஆய்வு செய்யாது தங்களுக்குத் தெரிந்த வகையில் வள்ளலைப் பற்றிய நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளனர். இத்தகைய குறைபாடான செய்திகளைக் கலைந்து வள்ளல் சீதக்காதி மரைக்காயரது சரியான வடிவத்தை வாசகர்களுக்கு வழங்கிய முறையில் சேது நாட்டு வரலாற்றுச் செம்மலான டாக்டர் S.M. கமால் அவர்கள் இந்த சிறு நூலினை வரைந்துள்ளார். வள்ளல் சீதக்காதி மரைக்காயரைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் இது ஒரு முதல் படியாகும். ஆதலால் இந்த நூலினை வாசகர்களுக்கு எங்களது பதிப்பாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். - பதிப்பகத்தார்