பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <) سیاست (இருந்த ரெகுநாத கிழவன் சேதுபதியை சந்திப்பதற்கு போகலூர் י போய்ச் சேர்ந்தார். இந்த சந்திப்பு சேதுநாட்டு வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியதை சேது நாட்டு வரலாற்றினை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும். பொதுவாக மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் நல்ல தொடர்புகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பாண்டிய மன்னர்களது வரலாற்றில் வணிகர்களை தங்கள் அரசவையில் வரவழைத்துச் சிறப்புச் செய்ததையும் வணிகர்களுக்கு பாண்டிய மன்னர் "எட்டி” “ஏனாதி” என்ற விருதுகளை வழங்கி சிறப்பித்ததுடன் "ஏனாதி மங்கலம்" என்ற நிலக் கொடையை அளித்து பாராட்டியதையும் பாண்டியர் வரலாற்றில் காண முடிகிறது. கிழவன் சேதுபதி மன்னரை அப்பொழுது சந்தித்த கீழக்கரை செய்கு அப்துல் காதர் மரைக்காயருக்கு ஏறத்தாழ முப்பது வயதிருக்கும். இவரது தந்தையின் பெயர் பெரிய தம்பி மரைக்காயர் என்று தெரிகிறது. பொதுவாக தமிழகத்திலுள்ள முஸ்லிமீகள் தமிழ் மக்களது சூழ்நிலையில் வாழ்ந்து வருவதால் அந்த மக்களைப் போன்றே பிச்சைத்தம்பி, சின்னத்தம்பி, செல்லத்தர்பி, நல்லதர்பி என்ற செல்லப் பெயர்களில் ஒருவரை ஒருவர் பெயரிட்டு அழைத்து வந்ததன் காரணமாக அப்பொழுது இருந்த கிழக்கரை செய்கு அப்துல் காதர் மரைக்காயரின் தந்தையரது பெயரையும் "பெரியதம்பி” என்ற செல்லப்பெயரில் அழைத்து வந்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே செய்கு அப்துல் காதர் மரைக்காயருக்கும் "பெரியதம்பி” என்ற பட்டப்பெயர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த பெரியதம்பி என்ற பெயர்களில் குழப்பமடைந்த வேற்று நாட்டாரான டச்சுக்காரர்கள் கீழக்கரையிலிருந்து ஒரு குடுமீபத்தினரது பொதுப்பெயராக அந்தக் குடும்பத்திலுள்ள பலருக்கும் பெரியதம்பி என்ற பெயர் இருந்ததாக | اسـ حا