பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ (அமைந்துள்ள அன்புக் கருணையும் பொலியும் அழகிய கண்கள். -།། அந்த முகத்தின் மேற்பகுதியில் தலைமுடியை முழுவதுமாக மறைத்த அழகிய வண்ணத்தொப்பி, அதனை மறைத்துச்சுற்றிய தலைப்பாகையாக காட்சி தருமச் சீனப்பட்டுத்துண்டு. இந்த எடுப்பான தோற்றம்தான் பிற்காலத்தில் வள்ளல் சீதக்காதி என மக்களால் அன்புடனும் மரியாதையுடனும் வழங்கப்பட்ட செய்கு அப்துல் காதர் மரைக்காயரது அழகிய திருஉருவம். இவரது தோற்றத்திலும், அனுபவமிக்க அன்பு மொழிகளிலும் சேது மன்னர் இவரிடத்தில் அளவற்ற பற்றும், பாசமும் கொண்டதில் 62%)αναλα?]6ύ6οου. கி.பி.1674-ல் கிழவன் சேதுபதியின் தாய் மாமனாரும், அவருக்கு முன்னாள் சேது பதியாக இருந்தவருமான திருமலை ரெகுநாத சேதுபதி ஆண் வாரிசு இல்லாமல் மரணமடைந்தார். அவரை அடுத்து சேது பதியாக ராஜசூரியதேவர் என்பவர் மதுரை நாயக்கர்களால் வஞ்சகமாக கொலை செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு சேதுபதியான ஆதன ரெகுநாதத்தேவரும் திடீரென வாரிசு இன்றி காலமானார். அதனால் சேது நாட்டின் அரசியல் தலைமையான சேதுபதி பட்டத்திற்கு தகுதியானவர் யார் என்பது பற்றிய பிரச்சினை மிகவும் சிக்கலான நிலையில் இருந்தது. இறந்துபோன மன்னரது நெருங்கிய உறவினர் பலர் சேது நாட்டின் அரியர்சனத்தில் அமர்வதற்கு முயன்று வந்தனர். அவர்களிடம் பல தகுதிகள் இருந்த பொழுதும் இராமநாதபுரம் அரண்மையில் உள்ள முதியவர்கள் கிழவன் என்ற ரெகுநாத தேவரை சேதுபதியாக்கினர். இதனால் விரக்தியடைந்த பல மறவர் தலைவர்கள் கிழவன் சேதுபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி நாட்டின் பல பகுதிகளில் குழப்பத்தையும், சீரழிவையும் ஏற்படுத்தி வந்தனர். இவர்கள் தவிர நாளுக்குநாள் வலிமை பெற்று வந்த மறவர் சீமையின் தன்னரசை அழிப்பதற்காக மதுரையிலிருந்த நாயக்க மன்னர்கள் ஒரு புறமும், இன்னொரு புறத்தில் கிழவன் امـ حا