பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி சேதுபதியின் மைத்துனரான (இரண்டாமர் மனைவியின்) சகோதரன்) ரெகுநாத தொண்டைமானும் இந்த நெருக்கடி நிலைக்கு தூபமிட்டு வந்தனர். இந்த குழப்பமான நிலையில்தான் மன்னருக்கும், கீழ க்கரை செய்கு அப்துல் காதரி மரைக்காயருக்கும் மேலே கண்ட சந்திப்பு ஏற்பட்டது. சேதுபதி மன்னருடன் அளவளாவிய மரைக்காயருக்கு மன்னரது சொந்த பிரச்சினைகள் அனைத்தும் புரிந்து விட்டன. உடுக்கை இழந்தவனது இடுக் கண் களைவதுதானே உண்மையான நட்பு ஆகும். ஆதலால் மரைக்காயர் அவர்கள் மன்னரது பிரச்சனைகளுக்கு வழங்கிய தெளிவான யோசனைகள் மன்னருக்கு மிகவும் ஏற் புடையதாக தோன்றியது. இதனையடுத்து மன்னரும் மரைக்காயர் அவர்களும் பலமுறை சந்தித்த காரணத்தினால் அவர்களிடையே ஒரு வித நெருக்கமான நேசமும், பிணைப்பும் வளரத் தொடங்கின. இதனால் மரைக்காயர் அவர்கள் மன்னரது குடும்பத்தில் ஒருவராக மிகுந்த மரியாதை யு டன் மதிக்கப்பட்டதில் வியப்பு இல்லை. மன்னர் மரைக்காயரை தனது உடன் பிறவாத சகோதரராக ஏற்றுப் போற்றி வந்தார். தமது குடும்பத்தினருக்குரிய " விஜய ரெகுநாத " என்ற சிறப்புப் பெயரையும் மரைக்காயருக்கு வழங்கி கெளரவித்தார். இதனால் சேதுபதி மன்னர் ஆவணங்களிலும், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது கடிதப் போக்குவரத்துகளிலும் மரைக்காயரை " விஜய ரெகுநாத பெரிய தம்பி " என குறிக்கப்பட்டுள்ளது. சேதுநாட்டின் அரசியல் அரங்கில் அடுத்தடுத்து பல எதிர்பாராத நிகழ்வுகள் தோன்றி சேதுபதி மன்னருக்கு தீராத தலைவலியாக அமைந்தன. அவைகளில் ஒன்று, திருச்சியில் இருந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் ஒருநாள் திருச்சி கோட்டையை விட்டு மாலை நேரத்தில் உலாவுவதற்கு வெளியே சென்ற பொழுது கோட்டைத்தளபதியாக இருந்த ருஸ்தக்கான் சொக்காநாத நாயக்கரை கைது செய்து