பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@2 → சிறையிலிட்டான். இதனை தனது நண்பர் கன்னிவாடி பாளையக்காரர் மூலம் அறிந்த கிழவன் ரெகுநாத சேதுபதி திருச்சிக்கு விரைந்து சென்று ருஸ்தக்கானைக் கொன்று சொக்கநாத நாயக்கரை மீண்டும் அரியாசனத்தில் அமரச் செய்தார். இதனைப் பாராட்டி மன்னரை சிறப்புச்செய்து இராமநாதபுரத்திற்கு வழியனுப்பிய பொழுது சேதுபதி மன்னருக்கு உதவியாக பணிபுரிவதற்கு குமாரப் பிள்ளையை தளவாயாக (தளபதி) சொக்கநாத நாயக்கர் அனுப்பி வைத்தார். இவர் தளவாயாக மட்டும அல்லாமல் திருச்சி சொக்கநாத நாயக்கரது இரகசிய ஒற்றனாகவும் வேவு பார்த்து வந்தார். சேதுபதி மன்னரை திடீரென சிறைப்பிடித்து திருச்சிக்கு கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்த சதியினை தெரிந்த மன்னர் தளவாயை கொன்று ஒழித்தார். கள்ளர் சீமை தலைவனான ரெகுநாத தொண்டமான் கி.பி.1686-ல் அதிருப்தி அடைந்த மறவர் தலைவர்களை துண்டிவிட்டு சேது மன்னருக்கு எதிராக கலகக்கொடி துரக்கு மாறு செய்தார். திருநெல்வேலி ப் பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்தபொழுது சேதுபதி மன்னரை பதிமூன்று நாட்டு தலைவர்க்ள ஆறாயிரம் பேர் கொண்ட அணியுடன் சாயல்குடி பகுதியில் வழி மறித்தனர். மிகவும் தந்திரமாக அந்த நாட்டு தலைவர்களை மட்டும் ஒருவர்பின் ஒருவராக தம்மை வந்து சந்திக்குமாறு மன்னர் சொன்னார். மன்னரது பேச்சை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த 13 தலைவர் களையும் கொடுரமான முறையில் கொன்று ஒழித்து விடும்படி ஏற்பாடு செய்தார். அடுத்து தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாவது சரபோஜி சேது நாட்டை கைப்பற்றுவதற்காக மதுரை மன்னரது உதவியுடன் ரகசியமான முறையில் படையெடுக்க வந்த பொழுது எதிர்பாராத வகையில் சேது நாட்டின் வடக்கு எல்லையிலேயே மராட்டியப்படைகளை சேதுபதி மன்னர் அழித்து ஒழித்தார். இத்தகைய இக்கட்டான2 r