பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r நிலைமைகளுக்கு தமது அரிய அனுபவத்தினால் மன்னருக்கு ད།། மரைக்காயர் அவர்கள் வழிகாட்டியாக விளங்கினார் எனத் தெரிய வருகிறது. இதன் காரணமாக மன்னருக்கு அடிக்கடி தக்க ஆலோசனைகள் வழங்குவதற்கு ஏதுவான முறையில் இராமநாதபுரம் அரண்மனைக்கு அருகிலேயே வடபுறத்தில் : மரைக்காயருக்கு ஒரு தனி மாளிகை ஒன்றை மன்னர் அமைத்துக் கொடுத்தார். இந்த மாளிகை அப்பொழுது "சின்ன அரண்மனை” அல்லது "புது அரண்மனை” என வழங்கப்பட்டது. சீதக்காதி நொண்டி நாடகம் இயற்றிய புலவர் செஞ்சிக் கோட்டையிலிருந்து கிழக்கரை சென்று சீதக்காதி மரைக்காயரைத் தரிசிக்க வந்த நொண்டி, மரைக்காயரை இராமநாதபுரம் மாளிகையில் தேடியதாகவும் பின்னர் கிழக்கரை சென்றதாகவும் இலக்கியத்தில் குறிப்பிட்டிருப்பது இங்கு ஆராயத்தக்கது. மேலும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னரது காலத்தில் மதுரை மன்னர் திருமலைநாயக் அன்பளிப்பாக வழங்கிய திருநெல்வேலி ச்சீமை கடற்கரைப் பகுதியில் இருந்த பரவர்களிடமிருந்து மன்னரது சார்பில் வரி வசூலிப்பு உரிமையையும் சேதுபதி மன்னர் மரைக்காயருக்கு வழங்கி இருந்தார். இதனைக் குறிப்பிடும் டச்சுக்காரரது ஆவணம் மரைக்காயரை "ரீஜென்ட்(அரசப்பிரதிநிதி)பெரியதம்பி” என குறித்துள்ளது. சேதுபதி மன்னர் மரைக்காயர் மீது | கொண்டிருந்த நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த செயல் அமைந்துள்ளது. சேதுபதி மன்னரது வீரமும் புகழும் வளர்ந்து கொண்டே வந்தது. ஆனால் சேதுபதி மன்னர் எங்கோ ஒரு கிராமத்தில் (புகலூரில்) தமது தலைமை இடத்தை அமைத்து நிர்வாகம் ! செய்து வந்ததை கவனித்த மரைக்காயர் புகலூரிலிருந்து தலைமையிடத்தை மாற்றும்படியாக மன்னருக்கு ஆலோசனை வழங்கினார்.