பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r இந்த விவரங்களை "மேனுவல் ஆஃப் இராமநாதபுரம்) சமஸ்தானம் ' என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மற்றும் இராமநாதபுரம் அரண்மனை அந்தப்புரத்திலிருந்து இரகசிய செய்திகள் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக அரண்மனை அந்தப்புரத்தில் பண்டைய தமிழ மன்னர்களது முறைப்படி ஊமைகளையும், அலிகளையும் பணியாளர்களாக நியமனம செய்தார். மன்னரது நிழல் படையாக பணிபுரிய முன்னூறு அபிசீனிய நாட்டு வீரர்களை வரவழைத்து மெய்க் காப்பாளர்களாக 4)ανω οστώ செய்தார். இவற்றிற்கெல்லார் மேலாக இராமநாதபுரம் கோட்டைக்குள் மன்னருக்கு அபாய நிலை ஏற்படும்போது கோட்டைக்கு வெளியே எளிதில் தப்பிச்செல்வதற்காக இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து சுரங்கப்பாதை ஒன்றையும் (சுருங்கை வழி) அமைத்தார். மேலும் அரச அவையில் மன்னர் குடிமக்களது வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூறுவதற்கும், வெளிநாட்டு அரசு அலுவலர்களை அரசவையில் வரவேற்பதற்குமான நெறிமுறைகளையும் மரைக்காயர் அவர்கள் வகுத்துக் கொடுத்தார். இவையெல்லார் ஒரு பேரரசர் அவரது நிர்வாகம், பணியாட்கள், வீரர்கள் ஆகியோர் எங்ங்னர் இயங்க வேண்டும் என்பதை பல நாடுகளுக்கும் சென்று வந்ததினால் ஏற்பட்ட பட்டறிவைக் கொண்டு மரைக்காயர் சேதுபதி அரண்மனையில் பயன்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. பொதுவாக சேதுபதி சீமையில் விளைபொருளான தானியங்கள் மூலம் கிடைக்கும் தீர்வை மட்டும்தான் சேதுபதி மன்னரது வருவாயில் பெரிய இனமாக அப்பொழுது இருந்து வந்தது. இதனைப் புரிந்து கொண்ட மரைக்காயர் அவர்கள். சேதுபதி மன்னரும் கடல் வணிகத்துறையில் ஈடுபட்டு அரசு வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சில கப்பல்களையும் புதிதாக அமைக்குமாறு செய்தார். அந்தப் கப்பல்களை வங்கக் கடலிலும், அரபிக்கடலிலும் சேது நாட்டுக் கொடியுடன் சென்று வருமாறு செய்தார். அவைகளில் ஒரு